

76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து சமுதாய மக்களுக்காக இலவச பீரீஸர் பாக்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் குமரி மாவட்ட மருத்துவ சேவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரி பள்ளம் மருத்துவமனை இணைந்து நடத்திய குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத் மாநில செயலாளர் தூத்துக்குடி அப்பாஸ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஹனீபா செயலாளர் நிசார்கபீர் பொருளாளர் ஜாஃபர் துணைத்தலைவர் சபீர் துணைச் செயலாளர் திருவை சித்தீக், முன்னிலை வகித்தார்.
மாவட்ட துணைச் செயலாளர் முபாரக் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார் .
சிறப்பு அழைப்பாளர்கள் பேராசிரியர் மருத்துவர் ஆஷிகா, இரத்த மைய
மருத்துவர் ரேகா கவுன்சிலர் பியாசா ஹாஜிபாபு, மனித நேய ஜனநாயக கட்சி செயலாளர் பிஜ்ருல் ஹபீஸ் , குமரி இரத்த கொடையாளர்கள் குழுமம் வெள்ளமடம்
ஆப்பிள் அஜித், மமக குளச்சல் நகர செயலாளர் அபுதாய்ரு. சமூக சேவகர் குளச்சல் முகம்மது சபீர். மாவட்ட பேச்சாளர் முகம்மது பாறூக் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ஷேக் சையத் நன்றியுரையாற்றினார்.
.
