

குமரியில் 10 மற்றும் 12 ம்வகுப்பு தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வசந்த் அன்கோ சார்பில் பாராட்டி பரிசுகள் வழங்கிய நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் தெரிவித்த விஜய் வசந்த்..,
நாடாளுமன்ற அவையில் எங்கள் இளம் தலைவர் மீண்டும் உரிமை பெற்று வந்து.புயல்பேல் பேசிய பேச்சு, வைத்த கேள்விகள்.”இந்திய”கூட்டணியை சேர்ந்த 142 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய உற்சாகத்தையும்.2024 தேர்தலில் கன்னியாகுமரி முதல், காஷ்மீர் வரை உள்ள இந்திய வாக்காளர்கள் அவர்களது “கை”யில் உள்ள வாக்குரிமையை.மோடிக்கு எதிராகவும்,அவர்களது கூட்டணிக்கு எதிராகவும் வாக்களித்து.ஒன்றியத்தில் உள்ள பாஜக ஆட்சியை அகற்று வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக,”மணிப்பூர் மாநிலத்தில் மக்கள் படும் துன்பம், வேதனை,சட்ட ஒழுங்கு இல்லாத நிலைகளில். அது குறித்து நம்பிக்கை இல்லை என்ற தீர்மானம் விவாதத்தில் நாடாளுமன்ற அவையில் பிரதமர் ஒரு வருத்தத்தை கூட தெரிவிக்கவே இல்லை.
மணிப்பூர் முதல்வர் ஒன்றிய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லும் பச்சை பொய்யின் பின்னால் இருக்கும் உண்மை.முதல்வரை மாற்ற மாட்டோம், ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த மாட்டோம் என்ற அதிகாரத்தின் வெளிப்பாடு என தெரிவித்தவரிடம்.
குமரிக்கு எதிர் வரும் (ஆகஸ்ட்)15,17,18 தேதிகளில் நடைபயணம் மேற்கொள்ள இருக்கும் அண்ணாமலையின் நடை பயணம் பற்றி கேட்டபோது.
பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை நடத்துவது. பாதையாத்திரை அல்ல. பாதி, பாதி யாத்திரை.! செய்தியாளராகிய நீங்கள் அண்ணாமலையை பேட்டி காணும் போது ஒரு கேள்வியை எழுப்புங்கள்.
ராமேஸ்வரம்_கன்னியாகுமரி இடைப்பட்ட தூரம் எத்தனை கிலோ மீட்டர்.? இவர் நடந்ததாக சொல்வது எத்தனை கிலோமீட்டர்? என கேளுங்கள். இந்த கேள்விக்கு அவர் பதில் சொன்னால் அம்பலபட்டுபோவார். இவர் சொகுசு வாகனத்தில் பயணித்ததே அதிக கிலோ மீட்டர் என்ற உண்மை அம்பலப்பட்டு போகும்.
குமரியிலிருந்து_காஷ்மீர் வரையிலான தலைவர் ராகுல் காந்தியின் முழுமையான நடைபயணம் என்பது. குமரி முதல் இமயம் வரை என்ற இந்தியா ஒரே நாடு என்ற தத்துவத்தை அவரது பாதங்களால் நடந்து தடம் பதித்துள்ள தையும் கடந்து. இந்திய மக்கள் மொழியால்,நாகரீகத்தால், கலாச்சாரத்தால்,இயற்கையின் வெவ்வேறு கால நிலைகள் இவற்றை எல்லாம் கண்ணால் நேரில் பார்த்து, மக்களின் எண்ணங்களை உள் வாங்கி கொண்டது. தலைவர் ராகுல் காந்தியின் பாதயாத்திரை.
அண்ணாமலையின் பாதி,பாதி யாத்திரை தேசப்பிதா காந்தியடிகளின் தண்டி யாத்திரை இந்திய மக்கள் மத்தியில் அன்று என்ன உணர்வை, உத்வேகத்தை கொடுத்ததோ, அத்தகைய உணர்வை இளம் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட “இந்திய ஒற்றுமை” யாத்திரை மக்கள் மனதில் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையையும், மடுவையும் எப்போதும் ஒப்புமை படுத்த முடியாது என விஜய் வசந்த் ஒரு இளம் புன்னகை வெளிப்பட தெரிவித்தார்.
