• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு – காவல்துறை சார்பில் தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி

ByP.Thangapandi

Jan 31, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரக காவல் துறை மற்றும் உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு,
காவல் துறையினர் தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பேரணி உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனையில் துவங்கி மதுரை சாலை , தேவர் சிலை , பேரையூர் சாலை என முக்கிய சாலை வழியாக சென்று வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் நிறைவுற்றது.

இதில் உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் சுகந்தி மற்றும் உசிலம்பட்டி சரக காவல்துறை காவலர்கள் இணைந்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும், இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.