
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசால் வழங்கக்கூடிய விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது.
இதில் 110 மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் அங்கயர்கன்னி முன்னிலையில் உசிலம்பட்டி அதிமுக (ஓபிஎஸ் )அணி எம்எல்ஏ அய்யப்பன் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

மேலும் உசிலம்பட்டியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 250 மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் மார்க்திகிரேஸ்ட் முன்னிலையில் உசிலம்பட்டி அதிமுக ஓபிஎஸ் அணி எம்எல்ஏ அய்யப்பன் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
இதில் அதிமுக ஓபிஎஸ் அணி ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் பிரபு, அம்மாபேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகைச்சாமி, நகர செயலாளர் சசிக்குமார், ஒன்றிய செயலாளர் ஜான்சன், கோஸ்மீன், ஆவின் சௌந்திரபாண்டி உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
