• Mon. Apr 21st, 2025

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி…

ByG.Suresh

Mar 3, 2025

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சிவகங்கை தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் திமுக சிவகங்கை தெற்கு ஒன்றிய சார்பில், முதல்வர் ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி தொடங்கி வைத்தார். இப்போட்டியில் சிவகங்கை இராமநாதபுரம் புதுக்கோட்டை மதுரை மாவட்டங்களில் இருந்து 17 காளைகளும்,153 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். வட்டமாக அமைக்கப்பட்ட திடலின் நடுவே காளை கட்டப்பட்டு அதனை 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் 20 நிமிடத்தில் அடக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டு போட்டி நடைபெற்றது.

விறுவிறுப்பான நடைபெற்ற போட்டியில் மாடுபிடி வீரர்கள் ஒருங்கிணைந்து தங்களது திறமையை வெளிக்காட்டி காளையின் திமிலை தழுவி அடக்கி வெற்றி பெற்றனர். போட்டியில் முதலில் விளையாடிய 6 போட்டியில் நான்கு காளைகள் பிடி காளைகளாக அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முளக்குளம் கிளைக் கழக செயலாளர் முத்துப்பாண்டி வரவேற்புரையாற்றினார் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு தெற்கு ஒன்றியம் செயலாளர் ஜெயராமன் பரிசுகளை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி மனோகர், மாவட்ட மகளிர் அணி மார்க்கெட் கமலா, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அழகு சுந்தரம் மற்றும் டாமின்குமார், புதுப்பட்டி அர்ஜுனன், முத்துக்குமார், நயினாங்குளம் சுரேஷ், கிளைக் கழகச் செயலாளர் அழகர், தமிழரசன், உசிலங்குளம் ராஜ் குமார் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டு போட்டியினை சிவகங்கை, சக்கந்தி தமராக்கி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்து போட்டியினை கண்டு ரசித்தனர்.