

707 கிலோ மீட்டர் ஓடிய சிவகங்கை கே.ஆர். தொடக்கப் பள்ளி 2 ஆம் வகுப்பு மாணவர் சாதனை படைத்துள்ளார்.
சிவகங்கை கே.ஆர். தொடக்கப் பள்ளி மாணவர் உலக அமைதி, பெண்கள் பாதுகாப்பு, தமிழ் மொழிப் பண்பாட்டு வளங்களைப்பாதுகாப்பு வேண்டி, உடற்பயிற்சி அவசியத்தை வலியுறுத்தி பெளதின் சிவார்திக் பிப்ரவரி 16 முதல் 28 கன்னியாகுமரி இருந்து சென்னை வள்ளுவர் வரை 12 நாள்கள் ஓடி முடித்துள்ளார். மாணவனுக்குப் பாராட்டு விழா கே.ஆர். மேனிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் ஜெயபாரதி, உதவி ஆசிரியர் நிர்மலா ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரக் கல்வி அலுவலர் ஞானகி ரேஸ் வளர்மதி, சோழன் புக் அஃப் வேர்ல்டு ரெக்கார்ட் நிமலன் நீலமேகம் , அரு. நடேசன் செட்டியார் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பாண்டியராஜன், அலவாக்கோட்டை நாராயணன் செட்டியார் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் மைதிலி, சுவாமி விவேகானந்தா தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் வாணி, தமிழாசிரியர் இளங்கோ, பட்டதாரி ஆசிரியர் முத்துசாமி ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர். முன்னாள் படை வீரர்கள் இராமச்சந்திரன், முருகன், சூரியபிரகாசம் , மாணவன் பெற்றோர் சிவக்குமார், ஆர்த்தி மற்றும் ஆசிரியர்கள் , அலுவலர்கள் , மாணவர்கள் கலந்து கொண்டனர்.

