தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திமுக வழக்கறிஞர் அணி சார்பாக 1500 பேருக்கு பேனா வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர்.நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் மற்றும் திலக் குமார் மற்றும் அரசு குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நிதி ஆகியோர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
உயர் நீதிமன்ற திமுக வழக்கறிஞர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் சார்பாக தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா உயர்நீதிமன்ற கிளை முன்பாக கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில் அனைவருக்கும் பேருந்து பயணிகள் பொதுமக்கள் வழக்கறிஞர்கள் என அனைவருக்கும் பேனா பரிசு வழங்கப்பட்டது அதேபோல் இனிப்பு வழங்கியும் திமுக வழக்கறிஞர் அணியினர் தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.