• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நட்டு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ByKalamegam Viswanathan

Mar 1, 2023

முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மரக்கன்று நட்பு இனிப்புகள் வழங்கி மதுரை மாநகர் மாவட்டம் திமுக நிர்வாகிகள்கொண்டாட்டம்.
மதுரை மாநகர் மாவட்டம் சம்மட்டிபுரம் பகுதி கழகத்தின் சார்பாக வார்டு எண் 65, 70 ஆகிய வார்டுகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். தமிழக முதல்வர் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று சம்மட்டிபுரம் பகுதி கழகச் செயலாளர் கே .தவமணி கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் வட்டக் கழக செயலாளர்கள் பாலாஜி ,பாலசிவகுமார் மற்றும் பகுதிகழக நிர்வாகிகள் சுசிசெல்வம்,அ. மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பின் வார்டு எண் 70 அவைத்தலைவர் பொன்ராமசாமி தலைமையில் சொரூப் நகர் பூங்காவில் 70 மரக்கன்றுகள் நடும் பணி துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கே. தவமணி, ஏ .மூர்த்தி, கே. தனசேகர் ,ராயல் சீனிவாசன் ,என். சேதுராமநாதன் ,கே. திருப்பதி மற்றும் மதுரை மாநகர்முன்னால் காவல்துறை ஆணையாளர் கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.