• Thu. Dec 12th, 2024

வருகிற 16-ந்தேதி 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி

ByA.Tamilselvan

Apr 13, 2023

ஐகோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து தமிழகத்தில் வருகிற 16-ந்தேதி 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த போலீசார் இன்று அனுமதி அளித்துள்ளனர்
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இதைதொடர்ந்து தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த போலீசார் இன்று அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தப்படுகிறது. . பேரணி நடைபெறும் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநகர பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுஉள்ளார்.