• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல்- கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்

Byதரணி

Mar 21, 2023

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று திறந்து வைத்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் அமாவாசை அன்று பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பூக்குழி திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவினை முன்னிட்டு தினமும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. பூக்குழி திருவிழா நடைபெற்றது. பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கோயில் அருகில் விருதுநகர் மேற்கு மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர அதிமுக கழகம் சார்பாக அமைக்கப்பட்டிருந்த நீர், மோர் பந்தலை கழக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி பழம், லெமன் ஜூஸ், மோர் வழங்கினார். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இன்பத்தமிழன், வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் துணைச் செயலாளர் ஆணழகன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர மாணவரணி செயலாளர் பெருமாள் பிச்சை, நகர மகளிரணி சிவராணி, நகரமன்ற கவுன்சிலர்கள் மாரியம்மாள், செந்தில், நகரப் பொருளாளர் சரவண முனி, நகர இளைஞரணி செயலாளர் அங்கு ராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி முருகன், சிவகாசி ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், சிவகாசி மாநகர பகுதி கழகச் செயலாளர் சரவணகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், மோதிரம் பொன்னுசாமி, சிவகாசி ஒன்றிய இளைஞரணி செயலாளர் கே.டி. சங்கர் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.