• Thu. Aug 20th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ மோகனப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்..,

ByK Kaliraj

Mar 17, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கீழத்தாயில்பட்டியில் திருமகள் நாயகனாக ஸ்ரீமத் நாராயணன் உலகில் வசிப்பவர்களையும் தர்மத்தையும் காப்பாற்றுவதற்காக வேண்டி தானே எடுத்த அவதாரங்களில் தவமுனிவர்கள் ரிசிகள் முதல் ஏழைகள் வரை பக்தர்களுக்கு அருள் பாலித்த பெருமாள் 500 ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்த இக் கோவில் சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்து அறநிலைத்துறைக்குட்பட்ட இக்கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷே திற்கான திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தன. திருப்பணி வேலைகள் முழுமையாக நடைபெற்று நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மோகனப் பெருமாள் கோவிலில் கணபதி ஹோமம் முதல் காலயாக பூஜை, மூல மந்திர ஹோமம் ,இரண்டாம் கால யாக பூஜை, என விமரிசையாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து விமான கலசத்திற்கும், பரிவார தெய்வங்களுக்கும், புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த சிறப்பு வாய்ந்த கும்பாபிஷேகத்தை மணவாள மாமுனி சன்னாசி ஜீயர் சடகோப முநி இராமானுஜர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அனந்த சயன பட்டர் மற்றும் கீழத்தாயில்பட்டி சீ ஸ்ரீநிவாசா ஐயர் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

சிறப்பு அழைப்பாளராக சிவகாசி பி. எஸ். ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர். சோலைச்சாமி கலந்துகொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். கும்பாபிஷேகத்தில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை திருப்பணி குழு கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.