தெலுங்கு திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ராஜமெளலி தான். இதற்கு எடுத்துக்காட்டாக கூறப்படுவது, இவரின் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான பாகுபலி திரைப்படம். அந்த காலகட்டத்தை அப்படியே கண்முன் நிறுத்தும் அளவிற்கு இவரின் படைப்பாற்றல் இருந்தது. நடிகர்களின் தேர்வும் அவ்வளவு நேர்த்தியாக இருந்தது என்று பாகுகுபலி படத்திற்கு அதிக பாராட்டும் கிடைத்தது!
தற்போது, ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ஆர்ஆர்ஆர். ராம்சரண் ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடிப்பில், பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் இம்மாதம் 7ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளி சென்றுள்ளது.
இந்நிலையில் ராஜமெளலியின் அடுத்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ராஜமெளலி சமீபத்தில் நடந்த ஆர்ஆர்ஆர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அடுத்ததாக மகாபாரதத்தை படமாக இயக்க போவதாக கூறியிருந்தார். தற்போது அதுகுறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது மகாபாரத கதையை படமாக எடுக்க ராஜமெளலி சுமார் இரண்டாயிரத்து முன்னூறு கோடி ரூபாய் தொகையை பட்ஜெட்டாக நிர்ணயம் செய்துள்ளாராம். மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் பட்ஜெட் 500 கோடி தான் அதை விட இது ஐந்து மடங்கு. மேலும் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பின் நாட்களும் அதிகம் என்பதால், நடிகர்கள் யாரும் 10 ஆண்டுகளுக்கு கால்ஷீட் கொடுப்பார்களா என்பது குறித்தும் பேசப்படுகிறது!