• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

நள்ளிரவில் பற்றி எரிந்த ஆம்னி பேருந்து!!

ByS.Navinsanjai

Nov 4, 2025

கோவையில் இருந்து திருச்சி செல்வதற்காக 15 பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலை பெரும்பாளி பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது பேருந்தின் இஞ்சின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.

தொடர்ந்து இஞ்சின் பகுதியில் இருந்து தீ பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பேருந்தை இயக்கி வந்த ஓட்டுநர் சாமர்த்தியமாக சாலையின் நடுவே பேருந்தை நிறுத்திவிட்டு பேருந்தில் பயணம் செய்த பயணிகளை இறக்கி விட்டார். தொடர்ந்து தீயை அணைக்க முற்பட்ட பொழுது தீ மள மள என பிடித்து எரியத் தொடங்கியது. அதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த பல்லடம் தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடு இரவில் ஆம்னி பேருந்து பற்றி எரிந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.