உலகம் முழுவதும் தற்போது வேகமாக தனது அலையை வீச தொடங்கி இருக்கிறது ஒமைக்ரான். பிரிட்டனில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே செல்கிறது. கொரோனா தொற்றுடன், ஒமைக்ரானும் இணைந்து அந்நாட்டு மக்களை பீதியடைய செய்துள்ளது.
அதன்படி, பிரிட்டனில் கடந்த 24 மணிநேரத்தில் 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12,133 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டபின், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரேநாளி்ல் பாதிக்கப்படுவது இதுதான் முதல்முறையாகும். பிரிட்டனில் ஒட்டுமொத்தமாக ஒமைக்ரான் பாதிப்பு 37ஆயிரத்து 101 ஆக அதிகரித்துள்ளது.
இதன்மூலம் அந்நாட்டில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியே 13 லட்சத்து 61 ஆயிரத்து 387ஆக அதிகரித்துள்ளது.