• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அம்மா பேரவை துணைச் செயலாளர் தலைமையில் தவெகவில் இணைந்த நிர்வாகிகள்..,

ByP.Thangapandi

Jul 10, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் விஜய் -யை நேரில் சந்தித்த அதிமுக மாநில அம்மா பேரவை துணைச் செயலாளரும், அதிமுக முன்னாள் அமைச்சர் துரைராஜ்-ன் மகனுமான துரை.தனராஜன் தலைமையில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கணபதி, கோவிந்தராஜ் மற்றும் கிளைச் செயலாளர்கள் சின்னக்காமன், அமைதி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.,

இதே போன்று பாஜக மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் மதன், சசிக்கலா பேரவையின் உசிலம்பட்டி நகர் கழக நிர்வாகி சசிக்குமார் உள்ளிட்டோரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து கொண்டனர்.,

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மாற்றுக் கட்சியினருக்கு உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் பொன்னாடை மற்றும் தவெக துண்டுகளை அணிவித்து வரவேற்று, வாழ்த்தினார்.,