• Sun. Oct 25th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

உயிரிழந்த ஐந்து பசு மாடுகளின் உரிமையாளர் குடும்பத்திற்கு கருப்பையா எம்எல்ஏ நேரில் சென்று ஆறுதல்..,

ByKalamegam Viswanathan

Oct 25, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஆலங்கொட்டாரம் பகுதியில் வசித்து வரும் ரமேஷ் என்பவர் தனது வாழ்வாதாரத்திற்காக வளர்த்து வந்த ஐந்து பசு மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற போது வாழைத்தோப்பில் அருந்து விழுந்து கிடந்த மின்வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் ஐந்து பசு மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தது சுமார் 5 லட்சம் மதிப்புள்ள பசு மாடுகள் உயிரிழந்த நிலையில்

தனது வாழ்வாதாரம் கேள்விக்குறியானதாகவும் அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார் இந்த நிலையில் ரமேஷின் வீட்டிற்கு வந்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா ரமேஷ் மற்றும் அவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். விரைவில் இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்து உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடுகள் செய்வதாக உறுதி அளித்தார் எம்எல்ஏ உடன் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் உட்பட பலர் உடன் வந்தனர்.