மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள எஸ் வி என் கலைக்கல்லூரியில் வருகிற 19 ஆம் தேதி அன்று காமராஜர் பிறந்த நாளை ஒட்டி கல்லூரி மைதானத்தில் 4000 மாணவர்கள் கலந்து கொண்டு காமராஜரின் உருவம் தெரியும் வண்ணம் அணிவகுத்து நிற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து கேட்டறிய காங்கிரஸ் கட்சி கிளியூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ் குமார் வருகை தந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பேசும்போது: 15-ஆம் தேதி அன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக 13-ஆம் தேதியிலிருந்து ‘லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்’ என்கின்ற தலைப்பில் ஒரு வார காலம் ஒரு சிறப்பான நிகழ்வுகளை நடத்துவதாக எங்களுடைய தமிழக காங்கிரஸ் கமிட்டியினுடைய தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அறிவுறுத்தலின்படி வருகின்ற 13-ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜருடைய உருவம் பொறித்த ஒரு மணல் சிற்பம் மெரினா கடற்கரையில் நிகழ்ச்சி ஒன்றும் 14 ஆம் தேதி குடியாத்தம் பெருந்தலைவர் காமராஜர் போட்டியிட்ட, சட்டமன்றத் தேர்தல் போட்டியிட்ட குடியாத்தத்தில் மிகப்பெரிய ஒரு பொதுக்கூட்டமும் நிறைவு நிகழ்ச்சியாக 19-ஆம் தேதி நாகமலை புதுக்கோட்டை எஸ் வி என் கல்லூரி மைதானத்தில் 4,000 மாணவர்கள் பங்கேற்கக்கூடிய பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் உருவம் தெரியும் வண்ணம் மாணவர்கள் அணிவகுத்து நிற்கும் மிகப்பெரிய நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

கரூரில் கூட்ட நெரிசலில் பலியானவர்கள் குடும்பத்துக்கு அரசு பணி விமர்சனம் குறித்த கேள்விக்கு: அது கட்சி சார்ந்த நிகழ்ச்சியாக பார்க்க கூடாது. ஒரு வழக்கம் உள்ளது இதுமாதிரி ஒரு விபத்து ஏற்பட்டாலோ அல்லது இது மாதிரியான ஒரு பிரச்சனை வந்தால், ஒரு அரசு வந்து இதுக்கு முன்னாடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து 10 வருஷம் பணியாற்றி இருக்கேன், இப்ப மூன்றாவது முறை. பல தடவை நானே வந்து சட்டமன்றத்தில் கேட்டிருக்கேன். அந்த ஏழ்மை குடும்பங்கள், பாவப்பட்டவங்களுக்கு எல்லாம் அந்த குடும்பத்துக்கு ஒரு அரசு வேலை வழங்கணும். ஏன்னா அவங்களுக்கு எதிர்காலமே இருக்காது, அதனால இது வந்து அரசியல் ரீதியாக நம்ம இதை பார்க்கக்கூடாது. என்பது என்னுடைய கருத்து.
ஸ்டெர்லைட்டுக்காக போராடினவர்கள் பல்வேறு விஷயங்களுக்காக போராடினவர்களுக்கு அரசு பணி கொடுக்கப்படுமா குறித்த கேள்விக்கு:

அரசு ஒவ்வொரு நிலையிலும் அதை கவனமாக கூர்ந்து கவனித்து பண்ணுவாங்க. ஏற்கனவே பண்ணியிருக்காங்க, இந்த அரசும் வந்து இதை நீங்க ஒரு அரசியல் ரீதியா எடுத்துக்கிடக்கூடாது.
சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு குறித்த கேள்விக்கு: சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு இப்ப நமக்கு 38 வருவாய் மாவட்டங்கள் இருக்கு. ஒவ்வொரு மாவட்டங்களிலும் சுற்றுலாத்துறை மூலமாக பல பணிகள் நடந்துட்டு இருக்கு. வரக்கூடிய காலத்தில இந்த சுற்றுலாத்துறையை எப்படி மற்ற மாநிலங்களை விட ஒரு முதன்மை மாநிலமாக எப்படி கொண்டு வர்றது, வெளிநாட்டு, வெளி மாநில சுற்றுலா பயணிகளை எப்படி ஈர்ப்பது இங்க இருக்கக்கூடிய நம்முடைய கோயில் சார்ந்த சுற்றுலா, இதையெல்லாம் திருப்பி மேம்படுத்த வேண்டும். நான் புதுசா வந்திருக்கேன், வரக்கூடிய பட்ஜெட்ல சுற்றுலாத்துறை சார்பாக நல்ல அறிவிப்புகளை நாங்கள் வெளியிடுவோம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ரோப் ஃபார் திட்டம் குறித்த கேள்விக்கு: கடந்த காலங்களில் அரசாணை வெளியிட்டது, இளைஞர்கள் ஈர்க்கக்கூடிய விதத்தில இப்பவும் ஒரு சுற்றுலா அறிவிப்பு என்பது பெருசு கிடையாது. வரக்கூடியவங்களுக்கு பாதுகாப்பு வேணும். உதாரணத்துக்கு இப்ப நம்ம வீட்ல இருக்கோம், வீட்ல இருந்து இன்னொரு இடத்துக்குப் போய் அங்க ஒரு ரெண்டு நாள் தங்கி இருந்து அங்க இருக்கக்கூடிய சிறப்புகளை எல்லாம் பார்க்கிறது தான் சுற்றுலா. அப்ப அவங்க வரக்கூடியவங்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும், அதேமாதிரி அவங்க வந்து பார்த்து இது மனதிலே என்றும் நிற்கின்ற இடமாக இருக்கணும்னு நாங்க விரும்புறோம். வரக்கூடிய காலத்துல மதிப்பிற்குரிய நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு நிறைய திட்டங்களை கொண்டு போயிருக்கோம். அந்த திட்டங்களை நிச்சயமாக வரக்கூடிய பட்ஜெட்ல நாங்க அறிவிப்போம்.




