• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சென்னை ஐஐடியில் ஒடிசா மாணவன் தற்கொலை

ByA.Tamilselvan

Sep 16, 2022

தேர்வில் தேர்ச்சி பெறாத வருத்ததில் சென்னை ஐஐடியில் ஒடிசா மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.யில் 4-ம் ஆண்டு ஏரோ ஸ்பேஸ் பொறியியல் படிக்கும் ஒடிசாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அவர் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறுதி ஆண்டு தேர்வில் 4 பேப்பர்களில் தேர்ச்சி பெறாத வருத்தத்தில் இருந்த அவர், ஸ்கிப்பிங் கயிறு மூலம் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், ஐஐடியில் ஒடிசா மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.