தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல்நிலையத்தில், 26 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கஞ்சா சப்ளை செய்த ஒடிசாவை சேர்ந்த கஞ்சா வியாபாரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் கடந்த 02.12.2024-ல் 26 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, நடத்திய விசாரணையில், மேற்படி வழக்கின் எதிரிகளுக்கு கஞ்சா வழங்கியவர் ஒடிசா மாநிலம் கொராபுட் மாவட்டம், ஜெயபூர் பகுதியைச் சேர்ந்த சுராஜ் சிங் என்பவர் என்பதும் தெரியவந்தது.
அதன் அடிப்படையில், தேனி மாவட்ட எஸ்பி சிவபிரசாத் உத்தரவில், காவல் ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் உதவி ஆய்வாளர் கதிரேசன் ஆகியோர் தலைமையிலான சிறப்பு போலீஸ் குழு ஒடிசாவுக்கு அனுப்பப்பட்டு, குற்றவாளி சுராஜ் சிங் என்பவர் கடந்த ஞாயிறு (20.04.2025) அன்று ஒடிசாவில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர் குற்றவாளியை ஜெயபூர் முதன்மை நீதிமன்றத்திலிருந்து இடம் பெயர்வு வாரண்ட் பெற்று, அவரை தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு கொண்டுவந்து, பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களை சேர்ந்த கஞ்சா விற்பனை செய்வோர்கள் மீது எடுக்கப்பட்ட ஆறாவது நடவடிக்கை ஆகும். இதுவரை மொத்தம் 16 கஞ்சா வியாபரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.