சென்னை வேளச்சேரியில் பிரம்மாண்டமான முறையில் ஆக்டகன் போன்று கட்டடம் ஒன்று உருவாகி வருகிறது.
சென்னையில் உள்ள வேளச்சேரியில் 12 மாடியில் பிரம்மாண்டமான ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பிரம்மாண்ட கட்டிடம் பீனிக்ஸ் மாலில் இருந்து குருநானக் கல்லூரி செல்லும் வழியில் சிக்னலுக்கு எதிரே கட்டப்படுகிறது. சுமார் 12 மாடியில் வித்தியாசமான முறையில் கட்டப்படும் பிரம்மாண்ட மாலில் பல அலுவலகங்கள் வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பிரம்மாண்ட கட்டிடம் ஆக்டகன் எனப்படும் 8 பக்கங்களைக் கொண்டதாக கட்டப்படுகிறது.
சுமார் 3 லட்சம் சதுர அடியில் கட்டப்படும் இந்த கட்டிடம் இரவு நேரத்தில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும். தற்போது அலுவலக பயன்பாட்டிற்காக பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு முன்பதிவு செய்து வருகிறது. இதன் இரு தளங்களை பயன்படுத்திக் கொள்ள டாடா குழுமம் ஒப்பந்தம் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பிரம்மாண்ட கட்டிடத்தின் பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது.