• Sat. Apr 20th, 2024

இந்தியாவில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் விவரம்..!

Byவிஷா

May 17, 2023

நாட்டில் மொத்தம் 2,597 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மாநிலக் கட்சிகள் ஆகியவை குறித்து அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு புது பட்டியல் தயாரிக்கப்படுவது வழக்கம்.
தற்போது இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய பட்டியலைத் தயாரித்து உள்ளது. நாட்டில் பா.ஜ. க, காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய 6 கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளாக உள்ளன.

தமிழக மாநிலக் கட்சிகளைப் பொறுத்தவரை  தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 4 கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஆகும். இவை தவிரத் தமிழ்நாட்டின் மற்ற மாநிலக்கட்சிகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக உள்ளன. தமிழகத்தில் இந்த கட்சிகளின் எண்ணிக்கை 200 ஆகும். நாடு முழுவதும் இப்படிப் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் எண்ணிக்கை 2,597 என்பது குறிப்பிடத்தக்கது.  இதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டு முறையாகச் செயல்படாத கட்சிகள் என 218 மாநிலக்கட்சிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
மொத்தம்  282 கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன.  இதில் தமிழகத்தில் மட்டும் 15 கட்சிகள் பழைய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக்கட்சிகளாக உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *