அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது சொந்தமாவட்டமான தேனியிலிருந்து அவசரமாக சென்னை திரும்ப உள்ளதாக தகவல்.
அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றுவருகிறது . இந்த கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதே நேரத்தில் இடைக்காலபொதுச்செயலாளராக எடப்பாடிபழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் அடுத்தடுத்து நடைபெற்றுவரும் நிலையில் ஓபிஎஸ் தேனியிலிருந்து அவசரமாக சென்னை திரும்புகிறார் என தகவல்கள் வெளியாகிஉள்ளது.