• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் ஜூன் 1 முதல் எண்ணும் எழுத்தும் பயிற்சி..!

Byவிஷா

Apr 29, 2023

தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பாக எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பாடநூல், ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர் பயிற்சி நூல் ஆகியவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பாக எண்ணும் எழுத்தும் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பருவம் ஒன்னுக்கான பயிற்சி வருகின்ற ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த பயிற்சியில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவேளையை எப்படி சரி செய்ய வேண்டும்,எட்டு வயதுடைய அனைத்து குழந்தைகளையும் வருகின்ற 2025 ஆம் ஆண்டிற்குள் அடிப்படை மொழி திறன்களை எப்படி பெற வைக்க வேண்டும் மற்றும் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பது குறித்து பல பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.