• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

டிஎன்பிஎஸ்சி சாலை ஆய்வாளர் பணிக்கான ஓர் முக்கிய அறிவிப்பு..!

Byவிஷா

Apr 29, 2023

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பணிக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஜனவரி 13ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்புக்கான தேர்வானது மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறும். தேர்வுக்கான நுழைவுச்சீட்டை டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தேர்வர்கள் விண்ணப்பை எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.