• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திமுக இதனால் தான் கூடுதலான வாக்குகள் பெற்றுள்ளது – நாதக வேட்பாளர் பரபரப்பு பேட்டி

ByP.Kavitha Kumar

Feb 8, 2025

கள்ள ஓட்டுக்கள்தான், திமுக கூடுதலான வாக்குகள் வாங்குவதற்கான காரணம் என்று ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி கூறினார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ கடந்த இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலை விட கூடுதலான வாக்குகளைப் பெற்று வருவதால், நாம் தமிழர் கட்சிக்கு இது பின்னடைவு கிடையாது. 2026-ம் ஆண்டு திமுகவுக்கு நிச்சயமாக பின்னடைவு ஏற்படுத்தப்படும். இந்த இடைத்தேர்தலில், திமுக கூடுதலான வாக்குகளை வாங்கும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் நிராகரித்து உள்ளனர்.

கள்ள ஓட்டுக்கள்தான், திமுக கூடுதலான வாக்குகள் வாங்குவதற்கான காரணம். ஈரோடு இடைத்தேர்தலை 2026-ம் ஆண்டு தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்த்ததால், திமுக தலைமைக்கு அச்சம் வந்துள்ளது. எனவே, 2026-ம் ஆண்டு தேர்தலில் இந்த மண்ணில் திமுக கடுமையான போராட வேண்டியிருக்கும்.
நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்துள்ள வாக்குகள் ஒருபோதும் எதிர்காலத்தில் வேறு கட்சிக்கு போகாது. பெரியார் குறித்து சீமான் விமர்சனம் செய்ததால் வாக்குகள் குறையவில்லை. ” என்று அவர் கூறினார்.