• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

கடைசி வரை திக்… திக்… திக் – டெல்லி முதல்வர் ஆதிஷி வெற்றி

ByP.Kavitha Kumar

Feb 8, 2025

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் முதல் சுற்றில் இருந்து பின்தங்கியிருந்த முதலமைச்சர் ஆதிஷி இறுதிச்சுற்றில் 989 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அர்விந்த கேஜ்ரிவால், தற்போதைய முதலமைச்சர் ஆதிஷி உள்பட 699 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.இந்த தேர்தலில் 60.54 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி முகத்தை எட்டியுள்ளார். அவர் 28ஆயிரத்து 238 வாக்குகள் பெற்ற நிலையில் 3ஆயிரத்து 789 வாக்குகள் பின்தங்கி 24 ஆயிரத்து 449 வாக்குகளுடன் அர்விந்த் கேஜ்ரிவால் பின்னடைவைச் சந்தித்தார்.

கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளரான முதலமைச்சர் ஆதிஷி 989 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 9 சுற்றுகள் வரை தொடர்ந்து பின்தங்கியிருந்தார். இறுதிச்சுற்றில் 989 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.