• Thu. Jun 8th, 2023

இனி வாட்ஸப் மெசேஜை எடிட் செய்யலாம்…

Byகாயத்ரி

Jun 1, 2022

உலகம் முழுவதும் மக்களால் பரவலாக பயன்படுத்தி வரும் வாட்ஸப் தனது செயலியில் எடிட் வசதியையும் ஏற்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் முக்கியமான இடத்தில் வாட்ஸப் உள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப வாட்சப் செயலியில் பல்வேறு வசதிகளும், அப்டேட்களும் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் பேஸ்புக்கில் உள்ளது போல வாட்ஸப்பிலும் ரியாக்ட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது வாட்ஸப்பில் அனுப்பப்படும் மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியையும் அறிமுகப்படுத்த வாட்ஸப் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான சோதனைகள் நடந்து வருவதாகவும் விரைவில் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் டெஸ்க்டாப்பிலும் இந்த வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *