அரசியலில் இருப்பவர்களில் ஒரு சிலர் மக்களுக்காக சென்றடையும் திட்டங்களில் ஊழல் செய்கின்றனர். இதனால் மக்களுக்கான நலத்திட்டங்கள் அவர்களுக்கு சென்றடைவதில்லை. இந்த ஊழல்களை தடுப்பதற்கு பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டாலும் பல்வேறு இடங்களிலும் இன்னும் ஊழல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில் ஆந்திராவில் ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் மீதான ஊழல் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க ACB 14400 செல்போன் செயலியை ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார். ஆந்திர மாநில ஊழல் தடுப்பு பிரிவால் தொடங்கப்பட்ட இந்த செயலியை பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.