• Mon. Jan 20th, 2025

வாட்ஸ்-அப் பயனாளிகளுக்கு விரைவில் புதிய வசதி

ByA.Tamilselvan

May 20, 2022

வாட்ஸ் அப் இல்லைஎன்றால் உலகமே முடங்கிவிடும் அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்துவருகிறது.புகைப்படங்கள்,வீடியோக்கள்,வீடியோகாலில் பேச, என தனிப்பட்ட முறையிலும் வணிக ரீதியாகவும் மிக அவசியமான ஒன்றாக வாட்ஸ் அப் மாறிவிட்டது எனலாம்.
பயனர்களின் வசதிகளுக்காகவும், தொழில் நுப்ட ரீதியாக அப்டேட் செய்யும் வகையிலும் வாட்ஸ் நிறுவனம் அவ்வப்போது மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்போது செய்யப்பட உள்ள இந்த புதிய அப்டேட்டால் பயனர்கள் பெரும் பயனடைவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி வாட்ஸ்அப் குழுவில் இருந்து எந்தவித அறிவிப்புமின்றி வெளியேற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சாதாரணமாக வாட்ஸ்அப் குழுவில் இருந்து வெளியேறினால் குரூப் சாட்டில் ‘நோட்டிபிகேஷன்’ வரும். இந்த தகவல் குழுவில் உள்ள அனைவருக்கும் தெரியும்படி வெளியாகும்.
இதனை பலரும் விரும்புவதில்லை. இந்த தகவலை கண்டவுடன் பலரும் அழைப்பு விடுத்து விசாரிக்க தொடங்கிவிடுவர்.இந்த புதிய வசதியில் நீங்கள் குழுவில் இருந்து வெளியேறினால் குரூப் சாட்டில் இனி அறிவிப்பு வராது. ஆனால், அந்த குழுவின் ‘அட்மின்’ மட்டும் தெரிந்து கொள்ளும் வகையில் தகவல் சேரும். பரிசோதனை அடிப்படையில் கொண்டுவரப்பட்டு பின்னர் அதிகாரப்பூர்வமாக செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.