பற்றி எரியும் திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மௌனமாக இருந்த திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா மீது வழக்கு தொடர நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என கூறிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான அமைதி கூட்டத்தில் அதிமுகவினர் பங்கேற்று கையெழுத்திடாமல் சென்றதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளதற்கு, மாற்று அறிக்கையோ, வருத்தமோ தெரிவிக்காததால் அவருக்கு வக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பேசியதாவது ..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மலை குறித்து சில நாட்களாக நடைபெற்று வரும் பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அது குறித்து ஒரு அறிக்கை கொடுத்துள்ளார். அந்த அறிக்கையில் 30-01-2025 நடைபெற்ற திருப்பரங்குன்றம் மலை குறித்த அமைதி கூட்டத்தில் அதிமுக பிரதிநிதிகள் கலந்து கொண்டதாகவும், அப்போது அந்த பிரதிநிதி அந்தக் கூட்டத்தில் கையெழுத்திட மறுத்து வெளியேறியதாக அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.
அதிமுக பொது அமைதிக்கு எப்போதும் உடன் இருக்கும் என்பது நாடறிந்த ஒன்று. அந்த அமைதிப் பேச்சு வார்த்தையில் சட்டமன்ற உறுப்பினரான எனக்கு எந்தவித அழைப்பும் இல்லை. மேலும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, உதயகுமார் மற்றும் எங்களை சார்ந்த நிர்வாகிகளுக்கும் எந்த அழைப்பும் இல்லை.
அப்படி அழைப்பில்லாத கூட்டத்தில் (அதிமுக)நாங்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை. ஆனால் எங்கள் பிரதிநிதி கலந்து கொண்டு கையெழுத்திட மறுத்ததாக கருத்து சொல்லி இருக்கிறார்கள். இது புங்க கம் விளைவித்து எங்களை களங்கப்படுத்துகிற வகையில் மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆகவே மாவட்ட ஆட்சியர் அந்த அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். இது தொடர்பாக நான் மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் அழைத்தும் நேரடியாகவும் சொன்னேன்.
ஆனால் அதற்கு அவர் செவி சாய்க்கவில்லை. மாவட்ட ஆட்சியர் அதிமுகவை களங்கப்படுத்த நினைத்ததால் சட்டப்படி வழக்கு தொடுப்போம் என்று சொல்லி இருந்தோம். அந்த வகையில் இப்போது சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு அதிமுக செல்லப்பா பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.
மதுரை மாவட்ட ஆட்சியர் தற்போது வரை எந்தவித வருத்தமோ அல்லது மறுப்போ செய்தியோ அறிவிக்காததால் எங்கள் வழக்கறிஞர் குழு அவர் மீது வழக்கு தொடுக்க முடிவு எடுத்துள்ளோம். இது தொடர்பாக அவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கையை மாற்றி அறிவித்து, வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பொது அமைதியும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது என்ற எண்ணத்தை அதிமுக கருத்தில் கொண்டு தான் செயல்பட்டு வருகிறது
மதுரையில் சட்டமன்ற உறுப்பினராக உள்ள நான் பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என எண்ணுகிறேன். அவரவர் மதத்தை அவரவர் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதே எனது எண்ணம் என MLA ராஜன் செல்லப்பா கூறினார்.



