• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

மேலகரம் பேரூராட்சியில் வேட்பு மனு தாக்கல்!

தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் திமுக சார்பில் போட்டியிட தலைமை கழகம் அறிவித்த வேட்பாளர்கள் இன்று தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர் மார்ட்டின் ராஜாவிடம் மனு தாக்கல்
செய்தனர்.

இதில், 1வது வார்டு கபிலன், 2வது வார்டு சுந்தரம், 5வது வார்டு லெட்சுமி, 7வது செல்வமணி, 8வது வார்டு விஜயலெட்சுமி, 10வது வார்டு சுடலை, 11வது வார்டு நாகராஜ் சங்கர், 13வது வார்டு செண்டு, 15வது வார்டு முத்துலெட்சுமி சங்கர் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.. அப்போது தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், பேரூர் செயலாளர் சுடலை, விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணன் (எ) கிட்டு, ரமேஷ்குமார் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.