• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பிரான்ஸ் எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

ByA.Tamilselvan

Oct 6, 2022
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் கடந்த திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியலுக்கான நோபல் பரிசுகள் கடந்த 3 தினங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு (வயது 82) வழங்கப்படும் என நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். பாலினம் மற்றும் மொழி தொடர்பாக சமத்துவத்தை தனது படைப்பில் வலியுறுத்தியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.