• Thu. Jun 1st, 2023

தமிழகத்தில் மின் தடை இல்லை… சீரான மின்சாரம் வழங்கப்படும்…

Byகாயத்ரி

May 10, 2022

தமிழகத்தில் எவ்வித மின் தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,பிற மாநிலங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் எந்த வித மின் தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்தில் 17 நாட்களுக்கு மே மாதத்தில் ஆறு நாட்களுக்கு உச்சபட்ச மின்தேவை 16 ஆயிரம் மெகா வாட்டாக உயர்ந்த போதிலும் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது.

மே 1 ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை 5,94,000யூனிட் மின்சாரம் 12 ரூபாய் என்ற அளவில் எக்சேஞ்ச் முறையில் கொள்முதல் செய்து நீண்டவை சரி செய்யப்பட்டது. மேலும் உளுந்தூர்பேட்டை பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள வீடுகளுக்கு தடையில்லாச் சான்று வழங்கப்பட்டால்தான் மின் இணைப்பு வழங்கப்படும் என்றும் மின்இணைப்பு இல்லாத வீடுகள் பற்றிய விவரங்கள் கொடுத்தால் வருவாய்த்துறை உடன் பேசி மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *