• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மூலவர் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது..,

ByKalamegam Viswanathan

Apr 7, 2025

வரும் ஜூன் மாதம் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு வரும் பம் தேதி பாலா லயம் நடைபெற உள்ளது.பாலாலய தொடக்க நிகழ்ச்சியாக நாளை மாலை 6 மணிக்கு சிறப்பு யாகம் நடைபெற உள்ளது.

யாக சாலையில் அத்தி மரத்தில் செய்யப்பட்ட மூலவர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதன் காரணமாக நாளை பிற்பகல் முதல் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மூலவர் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பாலாலயத்திற்கு பின் யாகசாலையில் வைக்கப்பட்ட மூலவர் சிலைகள் சண்முகர் சன்னதியில் வைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.