• Fri. Nov 6th, 2026

முன்னாள் துணை துணை மேயரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை..,

ByKalamegam Viswanathan

Nov 6, 2026

தமிழக அரசுக்கு எதிரான சதி! மதுரை எம்எல்ஏவிடம் 30 கோடி பேரம்
தமிழக அரசைக் கவிழ்க்கவும், எம்எல்ஏக்களைக் கட்சி தாவ வைக்கவும் 30 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக எழுந்துள்ள புகார் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மத்திய தொகுதி டிவிকে எம்எல்ஏ முஸ்தபா, கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தம்மிடம் ஆட்சி கவிழ்ப்பு மற்றும் கட்சி தாவலுக்காகப் பேரம் பேசப்பட்டதாகப் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். மேலும், மற்ற எம்எல்ஏக்களிடமும் இது போன்ற பேரம் நடப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த விவகாரத்தின் அடிப்படையில், மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மன்னன் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக அரசைக் கவிழ்க்கச் சதி நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், மதுரை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக 2026 பிப்ரவரி மாதம் அதிமுகவில் இவர் இணைந்தது குறிப்பிடத்தக்கது.