• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் சிகிச்சை முகாம்..,

ByKalamegam Viswanathan

Apr 7, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் தங்கமயில் ஜுவல்லரி மதுரை 24 மனை தெலுங்கு செட்டியார் உறவின்முறை சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

சோழவந்தான் காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் ,சார்பு ஆய்வாளர்கள் முருகேசன், ரவிச்சந்திரன் ஆகியோர், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். முகாமில் பொதுமக்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் இலவச கண் பரிசோதனை, செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

உறவின்முறை தலைவர் மாரியப்பன், செயலாளர் பொன்னையா, பொருளாளர்கள் முருகேசன், துரை, வீரமாரி பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் சோழவந்தான் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர் ராஜசேகரன் , செல்வம் முகாமினை ஒருங்கிணைப்பு செய்தனர்.