• Wed. Dec 11th, 2024

இனி சனிக்கிழமையும் பணி… பதிவுத்துறை அமைச்சர் அறிவிப்பு…

Byகாயத்ரி

Apr 28, 2022

அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்களின் வசதிக்காக விடுமுறை நாட்களான சனிக்கிழமையும் சார்பதிவாளர் அலுவலகம் செயல்படும் என பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பதிலளித்து பேசிய அமைச்சர், கடந்த ஆண்டைவிட வணிக வரித்துறையில் வருவாய் அதிகரித்துள்ளது. பதிவுத் துறையில் ஆவண எழுத்தர் உரிமங்கள் புதிதாக வழங்கப்படும். போலி பட்டியல் தயாரித்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய நபர்கள் கைது செய்யப்படுவார்கள்.

எனது விலைப்பட்டியல் எனது உரிமை என்ற திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்ய ஏதுவாக சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்படும். ஆவண பதிவிற்கான முன்பதிவு டோக்கன் வழங்குவதில் தட்கல் முறை அறிமுகப்படுத்தப்படும். திருமணச் சான்றிதழில் திருத்தம் செய்ய இணைய வழியாக விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும். சார் பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை மட்டும் ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.