• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

இனி பயமில்லை.. மோசமான நேரம் முடிந்துவிட்டது… – தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

Byமதி

Nov 11, 2021

சென்னையில் 15 மணிநேரத்திற்கும் மேலாக பெய்து கொண்டிருக்கும் கனமழையால் பல்வேறு சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வு மண்டலம், அடுத்த சில மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கும் வடதமிழக கடற்பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே இன்று மாலை கரையை கடக்கிறது. இதானல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக ஊடக பக்கத்தில் கூறி இருப்பதாவது,

மோசமான நேரம் முடிந்துவிட்டது. அவ்வப்போது மழை பெய்யும். மாலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி வடசென்னை-ஸ்ரீஹரிகோட்டா பகுதியை கடக்கும் வரை காற்று வீசும். சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டில் சராசரியாக 150 மி.மீ மழை பதிவாகியுள்ளது மற்றும் சில பகுதிகளில் 200 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.