• Thu. Jun 1st, 2023

ஜனாதிபதி தலைமையில் 51-வது கவர்னர்கள் மாநாடு

Byமதி

Nov 11, 2021

டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் 51-வது கவர்னர்கள் மாநாடு இன்று டெல்லி ராஷ்டிரபதி பவனில் தொடங்கியது. இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அனைத்து மாநில கவர்னர்கள் மற்றும் துணை நிலை கவர்னகள் கலந்து கொண்டுள்ளனர்.

மாநாட்டில் பேசிய ராம்நாத் கோவிந்த்,
‘சுமார் 2 ஆண்டுகள் கழித்து ஆலோசனை நடத்துகிறோம். கொரோனா தொற்று நோயை எதிர்த்து போராட, கொரோனா எதிர்ப்பு போர் வீரர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். தற்போது வரை இந்தியாவில 108 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் தடுப்பூசி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது’’ என்று கூறினார்.

கொரோனா பரவல் மற்றும் பல்வேறு பரபரப்பான அரசியல் சூழலில் நடைபெறும் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *