• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து

Byஜெ.துரை

Mar 2, 2026

தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று முதல் நாளில் தமிழ் உள்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,412 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதுகின்றனர்.

இது தொடர்பாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள்.

நாளைய வளமான சமுதாயத்தை உருவாக்க உள்ள நீங்கள் அனைவரும் இந்தத் தேர்வினைப் பதற்றமின்றி, அச்சமின்றி, துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். உயர்கல்வியில் சிறந்து விளங்கவும் அட்வான்ஸ் வாழ்த்துகள்!

நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.