சென்னையில் நேற்று இரவில் இருந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை மழையின் அளவு அதிகரித்தது.

இதனால் சாலைகளில் ஓடும் வெள்ளத்தின் அளவு கூடியது. இதனால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 சுரங்கப்பாதைகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இதனால் 11 சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டுள்ளது. 7 சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வியாசர்பாடி, கணேஷபுரம், அஜாக்ஸ், கொங்கு ரெட்டி, மேட்லி, துரைசாமி, பழவந்தாங்கல், தாம்பரம், அரங்கநாதன், வில்லிவாக்கம், காக்கான் என 11 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.