• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது- ஸ்டாலின் அதிரடி

ByA.Tamilselvan

Dec 3, 2022

திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 90ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டமைப்பு வழங்கும் சமூக நீதிக்கான கி.வீரமணி விருது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசத் தொடங்கிய அவர்… குடும்பம் குடும்பமாக இயக்கப்படுத்தியதால் இது குடும்ப இயக்கம் என்றே சொல்லலாம்.. கொள்கை ஒரு பக்கம் என்றாலும் பாசமும் அன்பும் தான் திராவிட இயக்கித்தின் அடிக்கட்டுமானம்.. எந்த கொம்பனாலும் திராவிட இயக்கத்தைத் தொட்டுக் கூட பார்க்க முடியவில்லை; இனியும் முடியாது.. திராவிட இயக்கம் என்பது கட்சியல்ல: கொள்கை உணர்வு, அது வளர்ந்து கொண்டே இருக்கும்” என்று அவர் பேசினார்.