• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

கி.வீரமணி 90-வது பிறந்த நாள்:
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

வீரமணியின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழக தலைவர் கி .வீரமணிக்கு இன்று (டிசம்பர் 2ம்) தேதி 90வது பிறந்தநாள். இதை முன்னிட்டு அவருக்கு முதல்-வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், பத்து வயதில் தொடங்கி தொண்ணூறு வயதிலும் சமூகநீதிப் போர்க்களத்தில் சளைக்காமல் போராடி, தந்தை பெரியார் காட்டிய பாதையில் பகுத்தறிவு இனமான உணர்வினை ஊட்டி வரும் ஆசிரியர் கி.வீரமணி அய்யா நீடு வாழ்க! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.