ஓடிடி-யில் வெளியான திரைப்படங்களை திரையரங்கில் வெளியிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் சர்பேட்டா பரம்பரை, நெற்றிக்கண் உள்ளிட்ட திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சவுண்ட் எபக்ட்ஸ் உடன் தியேட்டரில் பார்க்க விரும்புபவர்களே அதிகம் என்பதால், சில தயாரிப்பாளர்கள் ஏற்கனவே ஓடிடியில் வெளியான படங்களை தியேட்டரில் வெளியிட ஆலோசித்து வந்தனர்.
இந்நிலையில், ஓடிடியில் வெளியான படங்களை திரையிடுவதில்லை என தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஓடிடி விற்பனைக்கான முன்னோட்ட காட்சிக்கும் திரையரங்குகளில் வழங்குவதில்லை. திரையரங்கில் வெளியான 4 வாரங்களுக்கு பின் ஓடிடியில் வெளியிட்டால் மட்டுமே படங்களை திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.