• Mon. Jan 20th, 2025

3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Byவிஷா

Dec 23, 2024

தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று வழுவிலழந்த நிலையில் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது நாளை ஆந்திரா மற்றும் தமிழகம் நோக்கி நகரக்கூடும் என்றும் இது கரையை கடக்கும் போது தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இதன் காரணமாக தற்போது சென்னை, எண்ணூர், நாகை, கடலூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் அனைவரும் பத்திரமாக கரைக்கு திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இன்று பிற்பகல் ஒரு மணி வரையில் தமிழகத்தில் சேலம், நாமக்கல், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.