வறண்ட சருமத்திற்கு:
தேனில் ஈரப்பதம் தரும் பண்புகள் நிறைந்து உள்ளன. தேனை தொடர்ந்து சருமத்திற்கு பயன்படுத்தி வருவது வறண்ட சருமத்தில் இருந்து விடுதலை தருவதோடு, சருமத்திற்கு பொலிவையும், முகத்திற்கு பிரகாசத்தையும் வழங்குகிறது. சருமத்தில் எந்த வித பூஞ்சை தொற்றுகளும் ஏற்படாமல் பாதுகாக்க தேன் பெரிதும் உதவும்.