


சாம்பியன் டிராபி கிரிக்கெட் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி கண்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதன் முதல் போட்டி கராச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியுடன் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் மோதியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 50 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 320 ரன்களைக் குவித்தது. நியூசி தரப்பில் அதிகபட்சமாக டாம் லாதம் 118 ரன்களும், வில் யங் 107 ரன்களும் குவித்தனர். பாகிஸ்தான் சார்பில் ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா தலா 2 விக்கெட்டுகளையும், அப்ரார் அகமது 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இதையடுத்து, 321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான், நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. இதனால் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. இதனால் பாகிஸ்தான் 47.2 ஓவரில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து சார்பில் சாண்ட்னர், வில்லியம் ரூர்கி தலா 3 விக்கெட்டுகளையும், மேட் ஹென்றி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்கு அடித்தளம் அமைத்தனர்.

