• Sat. Sep 23rd, 2023

ஜம்மு-காஷ்மீர் தொகுதிகளுக்கு புது மறுவரையறை.. இந்திய தூதரகத்திற்கு பாகிஸ்தான் சம்மன்

Byகாயத்ரி

May 7, 2022

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சட்டப்பிரிவு 370ஐ சென்ற 2019ஆம் வருடம் மத்திய அரசு நீக்கியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் போன்ற 2 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் தொகுதிகள் மறு வரையறை செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 3 பேர் கொண்ட எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டது. இதனிடையில் பல்வேறு மாதம் ஆய்வுகளுக்குபிறகு ஜம்முகாஷ்மீர் தொகுதியானது மறு வரையறை செய்யப்பட்டு, அதன் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜம்முகாஷ்மீரில் 83-ஆக இருந்த சட்டசபை தொகுதிகள் புது மறு வரையறையின் அடிப்படையில் 90ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அதை தவிர்த்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பகுதிகளுக்கு 24 தொகுதிகளானது நிலுவையில் வைக்கபட்டுள்ளது. இதற்கிடையில் 90 தொகுதிகளில் 47 காஷ்மீருக்கு மற்றும் மீதமுள்ள 43 ஜம்மு-வுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தொகுதி மறுவரையறை வாயிலாக ஜம்முவிற்கு கூடுதலாக 6 தொகுதிகளும், காஷ்மீருக்கு கூடுதலாக ஒரு தொகுதியும் வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் தொகுதி மறுவரையறையை நிராகரித்துவிடுவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கிற ஜம்மு-காஷ்மீரில் இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் அடிப்படையில் அதிகாரத்தை நீக்கும் நோக்கத்தோடு தொகுதி மறுவரையறை குழு செயல்பட்டுள்ளதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் விதமாக தொகுதி மறுவரையறை செய்யபட்டு இருப்பதாகவும், இந்தியாவின் இந்த நடவடிக்கையை நிராகரிப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது பற்றி இந்திய தூதரகத்திற்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed