விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதி திருமணத்திற்கு பிறகு சமீபத்தில் துபாய் சென்றனர். நேற்று விக்னேஷ் சிவனின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு தெரியாமல் உலகின் உயரமான கட்டிடம் புர்ஜ் கலீபா வளாகத்தில் பிறந்தநாளை கொண்டாட நயன்தாரா ஏற்பாடு செய்திருந்தார். இதில் இருதரப்பு நண்பர்கள் வட்டாரத்தில் இருந்தும் பலர் கலந்துகொண்டனர். விக்னேஷ் சிவன்-நயன்தாரா அப்போது 3 பிறந்த நாள் கேக்குகள் வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதில் முதலாவது கேக்கில் ‘ஹேப்பி பர்த் டே மகனே’ என்றும், 2-வது கேக்கில் ‘ஹேப்பி பர்த் டே விக்கி சார்’ என்றும் 3-வது கேக்கில் ‘ஹேப்பி பர்த் டே உலகம்’ என்றும் எழுதப்பட்டு இருந்தது
இதில் உலகம் என குறிப்பிட்ட கேக் நயன்தாராவின் சார்பில் வைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த விக்னேஷ் பூரிப்படைந்துள்ளார்.
தனது பிறந்தநாள் குறித்து விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளதாவது, ஒரு அன்பான குடும்பத்தின் தூய்மையான அன்பினால் நிரப்பப்பட்ட பிறந்தநாள். என் மனைவியால் அற்புதமான ஆச்சரியம், என் தங்கம். புர்ஜ் கலிஃபாவிற்கு கீழே எனது அன்பான மக்கள் அனைவருடனும் ஒரு மறக்கமுடியாத பிறந்தநாள்! இதை விட சிறப்பாக பெற முடியாது. பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையில் அவர் எனக்குக் கொடுத்த அனைத்து அழகான தருணங்களுக்காக எப்போதும் கடவுளுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது புர்ஜ் கலீபா கட்டிடத்தின் கீழ் இருவரும் நெருக்கமாக நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.