• Sun. Dec 3rd, 2023

கமல்ஹாசன் சுற்றுப்பயணம் குறித்து வானதி சீனிவாசன் கிண்டல்

ByA.Tamilselvan

Sep 18, 2022

கமல்ஹாசன், கடந்த 2 நாட்களாக கோவையில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார் இதுகுறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதிசீனிவாசன் கிண்டல் செய்து பேட்டி.
கமல்ஹாசன், கடந்த 2 நாட்களாக கோவையில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார். விக்ரம் பட 100 நாள் வெற்றி விழா, பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, மாநகராட்சி பெண்கள் பள்ளி நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இது குறித்து வானதி சீனிவாசனிடம் கேட்டபோது .. ஓராண்டுக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கோவை தெற்கு தொகுதி குறித்து நினைவு வந்துள்ளது. அவர், மக்களிடம் மனுக்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால், அதை வாங்கியபிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பிரச்சினையை தீர்க்கலாம் என நினைக்கக்கூடாது. மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமெனில், நேரடியாக களத்துக்கு வந்து, தான் செய்யும் பணிகளை மக்களிடம் சொல்லட்டும். மக்களுக்கு சேவையாற்ற அனைவருக்கும் உரிமை உள்ளது. இப்போதாவது கோவை தெற்கு குறித்து அவருக்கு ஞாபகம் வந்ததை நல்ல விஷயமாகத்தான் பார்க்கிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா பேசிய பேச்சுகளை ஆதரிக்கிறாரா? திமுக அதை ஒப்புக்கொள்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். . இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *